வளர்த்து வரும் இளம் நடிகர் மற்றும் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் தற்பொழுது அவரது சமூக வலைத்தலைங்களில் நடிகை பிரியா பவானி ஷங்கரை காதலிப்பதாக சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் குழம்பி போன ரசிகர்கள் பலரும் இது ஏதாவது திரைப்பட ப்ரோமோஷனுக்காக பண்றிங்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு வேலை ரெண்டு பேரும் காதலித்த அப்போ பிரியா பவானி ஷங்கர் முன்னாள் காதலனின் நிலைமை என்னவென்று கோவத்துடனும் திட்டி தீத்து வருகின்றனர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளராக தன் வாழ்க்கையை தொடங்கி ப்ரியா பவானி ஷங்கர், விஜய் தொலைக்காட்சியில் காதல் கலந்த குடும்ப நாடகம் “கல்யாணம் முதல் காதல் வரை” நெடுந்தொடர் மூலம் பிரபலமானார். அதன் பின் சினிமாக்களில் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் நடிகர் வைபவ் உடன் “மேயாத மான்” என்ற திரைப்படம் மூலம் பெரியாத்திரையில் அறிமுகமாகி நல்ல முன்னேற்றத்துடன் மக்களால் பேசப்படும் நடிகையாக வளர்த்து வருகிறார்.
அதே போல் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி மிகவும் சிறிய ரசிகர்கள் படையை கொண்ட ஹரிஷ் கல்யாண் விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 யில் பங்கேற்று தன் குணத்தின் மூலம் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து படையை பெரிதாக்கினார். அதன் பின் அவருக்கு கால் வாய்த்த இடமெல்லாம் வெற்றி தான்! பியார் ப்ரெமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற காதல் படங்களில் நடித்து தமிழ் பெண்கள் பலருக்கும் காதல் மன்னனாக வளர்ந்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.
பியார் ப்ரெமா காதல் திரைப்படத்தில் தன்னுடன் மிகவும் நெருக்கமாக நடித்த மற்றொரு பிக் பாஸ் புகழ் ரைசா அவர்களை தான் ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார் என்று பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில். தற்பொழுது ஹரிஷ் பிரியா பவானி ஷங்கரும் இவரும் இணையப்போவதாக பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு உங்கள் பார்வைக்காக
Finally,
Happy for US ❤️❤️ @priya_Bshankar #HarishHeartsPriya#LoveIsInTheAir pic.twitter.com/vcW6syw4Nx— Harish Kalyan (@iamharishkalyan) September 29, 2020
இதற்கு பிரியா பவானி ஷங்கர் பதில் என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர் பார்த்த நிலையில் அவரும் குலாக அதற்கு சம்மதிக்கும் வகையில் ரிப்ளை செய்துள்ளார். அந்த ரிப்ளை இணைக்கப்பட்டுள்ளது
Lockdown mudiyara varaikum unnala wait panna mudila la @iamharishkalyan 😡
I wanted to make it public first.. I earned it😏— Priya BhavaniShankar (@priya_Bshankar) September 29, 2020
இதற்கு மேல் என்னால் காத்திருக்கவே முடியாது நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமான பதிவை வெளியிடுவதாகவும் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார். “சரி நீ எப்போ முடி வேட்டுவ?” என்று பிரியா கேட்டதற்கு “இந்த செய்தியை வெளியிட்ட பின்னரே வெட்டுவேன்” என்று ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.
Cant wait! Wont wait! I’m making it official! 5pm tomorrow!!! 🤗❤️
— Harish Kalyan (@iamharishkalyan) September 29, 2020
இப்படி இவர்கள் சமூக வலைத்தளத்தில் பண்ணும் ரொமான்ஸினால் குழம்பி போயுள்ள ரசிகர்கள் இன்று 5 மணிக்கு காத்திருக்கின்றனர். ஒருவேளை இது பட ப்ரமோஷனுக்காக இருந்தால் ரசிகர்கள் திட்டுவதை காதில் கேட்க முடியாதென்பது உறுதி. இவர்கள் தற்பொழுது தெலுங்குவில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்து வருகின்றனர்.
பிரியா பவானி ஷங்கர் ஏற்கனவே ராஜவேல் என்பவரை காதலிப்பதும் விரைவில் திருமணம் என்ற பதிவை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.