KPY Sarath Marriage

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தமிழ் திரையுலகின் பிரபலங்கள் பலருக்கும் திருமணம் நடந்து வருகின்றது. அதும் கொரோனா ஊரடங்கால் பெரிய அளவில் விளம்பரமின்றி சிம்பிளாக நடந்து வருகின்றது அந்த வரிசையில் சின்னத்திரை சித்ரா சூப்பர் சிங்கர் விக்ரம் போன்றவர்களின் நிச்சயதார்தங்களை தொடர்ந்து தற்பொழுது மற்றோரு விஜய் தொலைக்காட்சி பிரபலத்திற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!!

காமெடியர்களுக்கு ஒரு படித்தளமாக உருவாக்கப்பட்ட கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி வெற்றியடைந்த சரத் ராஜிற்கு தான் தற்பொழுது நிச்சயதார்தம் நடந்து முடிந்துள்ளது. 2007-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் 2015-ம் ஆண்டு வெளியான கலக்க போவது யாரு சீசன் 5 யில் சரத் பங்கேற்றிருந்தார்.

KPY Sarath

தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ், மிமிகிரி சேது, தொகுப்பாளர் பிரியங்கா ஆகியோராய் நடுவர்களாக கொண்ட இந்நிகழ்ச்சியில் சரத் அதிகமாக மொட்டை ராஜேந்தர் கெட்டப்பில் வந்து மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அதன் வாயிலாக சினிமா துறையில் நுழைய வாய்ப்பு கிடைத்ததால் சரத் தற்பொழுது பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்.

32 வயதாகும் கலக்க போவது யாரு புகழ் சரத் அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது அதன் பின் கொரோனா தொற்றலின் காரணமாக நெருங்கிய சொந்தங்களை வைத்து அரசு விதிமுறைகள் படி ஆகஸ்ட் 3-ம் தேதி திருமணமும் முடிந்துள்ளது. இந்த நற்செய்தி அவரது ரசிகர்கள் பலருக்கும் சேர்ந்து விடாத நிலையில் தற்பொழுது தான் ரசிகர்களின் மத்தியில் பரவி வருகின்றது. அதை அறிந்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here