பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது மொட்டை பாஸ் நிகழ்ச்சியாக மாறி வருகிறது. வந்த முதல் வாரத்திலேயே கொளுத்தி போட்டு வேடிக்கை பார்த்த சுரேஷ் அவர்களை முதல் வாரத்தில் அனைவரும் வெறுத்தாலும் இரண்டாம் வாரத்தில் அவர் செய்த காரியம் அனைவரது மனதையும் வென்றது. மொட்டை தாத்தா என அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியும் வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் எலிமினேட் ஆனா ரேகா சுரேஷ் பற்றின உண்மைகளை தெரிவித்துள்ளார். 1 மணி நேரம் மட்டும் காட்டும் இந்நிகழ்ச்சியில் மற்ற நேரங்கள் என்ன நடக்கின்றது என நமக்கு தெரியாது. ஆனால் 24 மணி நேரமும் உள்ளே இருந்து கண்காணிக்கும் போட்டியாளர்களுக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பது நல்லாவாகவே தெரியும் அதனாலேயே போட்டியின் நடுவில் வெளியேறும் போட்டியாளர்களின் பேட்டிகளை மக்கள் விரும்பி பார்ப்பனர்.

Rekha in Bigg Boss

அப்படி பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி எதிர்பாராத விதமாக முதல் வாரத்திலேயே வெளியேறிய ரேகா தற்பொழுது பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ரேகாவிடம் நேற்றைய எபிசொட்டில் சுரேஷை பற்றி கேட்ட பொழுது “மொட்டை பாஸ் மிகவும் தந்திரமாக விளையாண்டு வருகிறார். அதுமட்டுமின்றி, பிக் பாஸ் அவர்களே என்னை வீட்டை விட்டு அனுப்பினாலும் நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டேன் என்று சுரேஷ் கூறினார், அவர் சமீபத்தில் அழுந்தது கூட ஒரு வகையான தந்திரம் தான் அதை நம்பி யாரும் விழுந்துவிட வேண்டாம்” என ரேகா பேட்டியில் கூறியுள்ளார்.

மற்ற போட்டியாளர்களை பற்றியும் பேசிய ரேகா பாலா மற்றும் ஷிவானி தான் அவருக்கு மிகவும் பிடித்தவர்கள் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது பலர் சொல்லுவது போல் ஸ்கிரிப்ட் அல்ல அவர் அவர் தந்திரத்தில் தான் அவர் அவர் ஆட வேண்டும். எனக்கு தெரிந்த வரை நான் உண்மையாகவே விளையாடினேன் என்றும் கூறியுள்ளார். அவர் பேசிய முழு பேட்டி உங்களின் பார்வைக்காக!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here