Avvai Shanmugi first getup

௧௯௯௬ ம் ஆண்டு வெளியாகி மக்களின் மத்தியில் மிகவும் பேசப்பட்ட திரைப்படம் அவ்வை ஷண்முகி. ஆங்கில திரைப்படம் மிஸ்சஸ் டவுட் பையர் என்ற திரைப்படத்தை அடித்தளமாக வைத்து எடுத்த இத்திரைப்படம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று. அதிலும் அவ்வை ஷண்முகி கதாபாத்திரம் ரசிகர்களை வென்றது. அப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கு முதலில் போட்ட கெட் அப் இதுவரை பார்த்ததுண்டா? இதோ உங்களுக்காக!

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கிரேசி மோகன் கதையில் கமல் மீனா ஜெமினி கணேஷன் நாகேஷ் மணிவண்ணன் நாசர் போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் அவ்வை ஷண்முகி. ஆங்கில திரைப்படத்தை மையமாக வைத்து எடுத்திருந்தாலும் அவ்வை ஷண்முகி திரைப்படத்தை மையமாக வைத்து மற்றொரு தமிழ் திரைப்படம் எடுத்திருப்பது தான் இந்த திரைப்படத்தின் வெற்றி. அவ்வை ஷண்முகியை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் தான் “ரெமோ”.

Avvai Shanmugi

திருமணம் செய்து கொண்ட பின் கணவருடன் மானஸ்தம்பம் ஏற்பட்டதால் பிரிந்திருக்கும் மனைவியை சமாதானம் செய்ய வழி தேடும் கணவர் வேலைக்காரியாக வேடம் போட்டு அவ்வை ஷண்முகி என்ற பெயரில் தன் மனைவியின் வீட்டில் வேளைக்கு சேர்வர். வேளைக்கு சேர்ந்த பின் அவ்வை ஷண்முகியாக தன்னை பற்றி புரியவைப்பது தான் இந்த திரைப்படம்.

இப்படத்தில் அவ்வை ஷண்முகி என்ற பெண் வேடத்தில் நடித்திருப்பதால் அவருக்கு முதலில் பெண் வேடமிட்டு சோதனை செய்துள்ளார். அது மனதிற்கு பிடிக்காததால் தான் மறுபடியும் திரைப்படத்தில் தோன்றும் கெட் அப்பை தேர்ந்தெடுத்துள்ளார். திரைப்பட குழுவினருக்கு இந்த கெட் அப் பிடிக்கவில்லை என்றாலும் இது கூட ஒரு மாதிரி நல்ல தான் இருக்கு என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் ஆனாலும் அந்த கெட் அப்பை அடித்துக்கொள்ளமுடியாது என்பது உறுதி. அந்த கெட் அப் உங்கள் பார்வைக்காக!!

Kamal Avvai shanmugi get up

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here