இந்திய சினிமா நடிகையான நித்யா மேனன் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் தொடர் வெற்றி கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி மெர்சல் உட்பட பல படங்களுக்கு சிறந்த நடிகை என்ற பிலிம்பர் விருதையும் பெற்ற பெருமையை கொண்டவர்.
பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நித்யா மேனன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தான் டாப் நடிகையாக இருப்பதில் ஆசை இல்லை நல்ல கதாபாத்திரங்களில் தோன்றி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பது தான் பெருமை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்பொழுது நித்யா மேனன் தன் காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதைப் பற்றி அவர் கூறுகையில் “நானும் என் நெருங்கிய நண்பரும் காதலித்து வந்தோம். இருவரும் உண்மையாக காதலித்து வந்த நிலையில் சில பிரச்சனைகளால் அவர் என்னை விட்டுப் பிரிந்தார். அந்த பிரிவை தாங்க முடியாமல் ஆண்களை வெறுத்தேன் காதலின் மீதுள்ள நம்பிக்கையும் இழந்தேன் அதில் இருந்து தான் சிங்கள்ளாக இருந்து வருகிறேன்” என்று சற்று சோகத்துடன் விளக்கினார்.
அத்துடன் நான் மற்றவர்களுக்காக என்னை மாத்திக் கொள்ள முடியாது எனக்கென்ற சில கோட்பாடுகள் உள்ளன மத்த பெண்களைப் போல தான் என் சிந்தனையும் இருக்கும் எனக்கு இப்பொழுது காதலிப்பதில் பெரிதளவில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். அவர் யாரை காதலித்தார் என்பதைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.