2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்சன் படம் தான் போக்கிரி.பிரபு தேவா இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,அசின் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இப்படம் தெலுங்குவில் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார்.மகேஷ் பாபு இப்படத்தில் தெலுங்கில் நடித்துள்ளார்.போக்கிரி படத்தில் விஜய் அவர்கள் ரகசிய போலீஸாக நடித்து இருப்பார்.போக்கிரி படத்தின் அனைவரும் சிறப்பாக நடித்து இருப்பார்.
இப்படமானது தமிழ் சினிமா ரசிர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இதை ஹிந்தியிலும் மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்துள்ளார்கள்.ஹிந்தியில் சல்மான் கான் நடித்த வான்டட் மற்றும் கன்னடத்தில் போர்கி.
இதில் சிறுவனாக நடித்துள்ளவர் தான் மாஸ்டர் பாரத்.பாரத் அவர்கள் 1995 ஆம் ஆண்டு பிறந்தவர்.இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். வின்னர், சிலம்பாட்டம்,உத்தம புத்திரன்,சிறுத்தை,மிரட்டல் ஜெய் ஹிந்த் 2,இஞ்சி இடு்ப்பழகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.