இந்திய சினிமா துறையில் நடிகையாக வளம் வந்தவர் நடிகை கீர்த்தி ரெட்டி.இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.1996 ஆம் ஆண்டு கன் ஷாட் திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் அதை தொடர்ந்து 1997ஆம் ஆண்டு தேவதை என்னும் படத்தில் கயல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர்.நந்தினி, ஜாலி,இனியவளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
1998 ஆம் ஆண்டு தோழி பிரேமாவிலும் மற்றும் 2000 ஆம் ஆண்டு ஹிந்தியிலும் டெரா ஜாது சால் கயா விலும் நடித்துள்ளார்.1999ஆம் ஆண்டு நினைவிருக்கும் வரை படம் தான் இவருக்கு மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.
நடிகை கீர்த்தி ரெட்டி அவர்கள் 2004இல் நடிகர் சுமந்த் உடனான திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.கீர்த்தி ரெட்டி மற்றும் சுமந்த் அவர்கள் 2006 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.அதற்கு பிறகு எந்த படத்திலும் தோன்றவில்லை.மேலும் தற்போது வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.