2008-ம் ஆண்டு காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சித்தார்த் தமன்னா ரிஷி ருக்குமணி போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்ட திரைப்படம் ஆனந்த தாண்டவம். அதில் இடம் பெற்றிருந்த கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே என்ற பாடல் இப்பொழுது கூட பல பெண்மணிகளுக்கும் மிகவும் பிடித்தமான பாடல் அதிலும் நடிகை ருக்குமணி ஆடியிருக்கும் நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட நடன இயக்குனர் மற்றும் நடிகரான ருக்குமணி 2008-ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கிய பொம்மலாட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதில் அர்ஜுன் ஷார்ஜா காஜல் அகர்வால் நானா படேகர் விவேக் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் அப்பொழுதே பாக்ஸ் ஆபீஸ் வெற்றியடைந்தது.
அதன் பின் ஆனந்த தாண்ட திரைப்படத்தில் தோன்றிய ருக்குமணி அடுத்தடுத்து கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் அறிமுகமானார். இவர் கொச்சையடையான் திரைப்படத்திற்கு பின் கடைசியாக தோன்றியது 2017-ம் ஆண்டு கார்த்தி நடித்த “காற்று வெளியிடை” திரைப்படம் தான்! அதில் அவர் நடித்த டாக்டர் நளினி கதாபாத்திரம் பலருக்கும் பிடித்தமான ஒன்று.
அதற்கு பின் ருக்குமணி விஜயகுமார் சினிமா படங்களில் தோன்றுவதை தவிர்த்து பரதநாட்டியத்தில் ஈடுபட்டு வருகிறார். அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார். அதில் அவர் ஆடும் நடந்தை கண்ட ரசிகர்கள் பலரும் அவர் ரப்பர் போல உடம்பை வளைத்து ஆடுவதை பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது இணைய தளங்களிலும் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram