நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்குளுக்கு மிகவும் பழக்கப்பட்ட முகம். பலருக்கும் கனவு கன்னியாக வளம் வந்த சமந்தா இரண்டு ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜூனா மகன் நாகா சைதன்யாவை பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் பிரபலங்கள் சூழ திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பல கருத்து வேறுபாடுகளால் பிரியும் பிரபலங்களின் மத்தியில் இவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர் அவர் தனிப்பட்ட விசயங்களில் மூக்கை நுழைக்காத இந்த ஜோடிகள் இருவருமே அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தங்கள் ரசிகர்களிடம் கலந்துரையாட சமூக வலைத்தள பக்கங்களும் உபயோகித்து தான் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு ஒன்றில் ரசிகர் ஒருவர் நாக சைதன்ய அவர்களை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்யும் படி வேடிக்கையாக கூறினார்.
அதற்கு வேடிக்கையாக பதிலளித்த சமந்தாவும் நான் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வது கடினம் வேணுமென்றால் நீங்கள் என் கணவர் நாக சைதன்யாவை கேட்டுக்கொள்ளுங்கள் என்று பதிலளித்தார். அந்த கமெண்ட் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமின்றி இந்த இளம் ஜோடிகள் இருவரும் சந்தோசமாக தங்களது கல்யாண வாழ்க்கையை வாழ்ந்து வருவதும் வெளிப்படையாக தெரிகிறது.
சமந்தா சமீபத்தில் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சியை தன் மாமனாருக்கு பதில் தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சமந்தா கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஜானு என்ற தமிழ் ரீமேக் திரைப்படம் தான். அவர் தன் ரசிகருக்கு பதிவிட்டிருந்த பதிவு உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
I like samantha