தமிழ் சினிமாவை பொறுத்த வரை லக் இருந்தால் ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்து.அந்த வகையில் தான் பல நடிகைகள் பல நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள்.

அவ்வாறு இருக்க ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்கள் நடித்து விட்டு காணாமல் போன நடிகைகளும் இருக்கிறார்கள். நடிகை ரிச்சா பல்லோட் ஹிந்தியில் லம்ஹே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.

தெலுங்குவில் நுவ்வு காவலி என்ற படத்திற்காக சிறந்த நடிகை விருதை வாங்கியுள்ளார். தமிழில் ஷாஜகான் படம் மூலம் அறிமுகமானார்.அப்படம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

காதல் கிறுக்கன், சாம்திங் சாம்திங் உணக்கும் எனக்கும், யாகரவாயினும் நா காக்க போன்று படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என அனைத்து துறைகளிலும் கால் தடம் பதித்துள்ளார்.இறுதியாக மல்பு படத்தில் நடித்துள்ளார்.

ஷாஜகான் படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலுமே அரசியல் மத்தியில் பிரபலம்.விஜய் காதல் தோல்வியில் காட்டி இருந்தாலும் அவருக்கு ஜோடியாக ரிச்சா சில காட்சிகளில் நடித்து இருப்பார்.

ரிச்சா அவர்கள் ஹிமான்சு பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அப்படி இருக்க ரிச்சா பல்லோட் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here