தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கணக்காளர் பணியாற்றிய விஜய் சேதுபதி பெரிய நடிகராக வேண்டுமென லட்சியத்துடன் சினிமா படங்களில் சில கவனிக்கப் படாத கதாபாத்திரங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். மக்களுக்கு பிடித்த படியாகவும் நடித்து வந்த விஜய் சேதுபதி தன் ரசிகர்களுடன் செய்த செயலால் லாபம் திரைப்பட படப்பிலிருந்து ஸ்ருதி ஹாசன் கோபத்துடன் கிளம்பியுள்ளார்.

ஊரடங்கால் தடைப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் தற்பொழுது விதிமுறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தை விஜய் சேதுபதி தயாரிப்பில் ஜனநாதன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Laabam First Look

பொதுவாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தன் ரசிகர்களுடன் சகஜமாக பழகுபவர் தன்னை நேரில் காண வரும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களையும் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் லாபம் படப்பிடிப்பிலும் தன்னை காண வந்த ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் அதனைக் கண்ட ஸ்ருதி ஹாசன் இவர் செய்யும் செயலால் படப்பிடிப்பு குழுவினர் அனைவர்க்கும் காரோண தோற்று பரவ வாய்ப்புள்ளது என கோபத்துடன் படப்பிடிப்பில் இருந்து விலகியுள்ளார்.

விலகி உள்ள ஸ்ருதி ஹாசன் இதனை பற்றி மறைமுகமாக தன் சமூக வலைத்தளத்தில் பட குழுவினரை எச்சரித்துள்ளார் இதைப் பற்றி அவர் கூறுகையில் “கோவிட் என்பது உயிரைக் கொல்லும் கொடிய தோற்று நோய் அப்படிப் பட்ட நோய் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. அதற்கான நெறி முறைகளை பின்பற்ற விட்டாலும் ஒரு நபராகவும் நடிகராகவும் எனது ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வது எனது உரிமை!” என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரிடம் இருந்து இதைப்பற்றி எந்த விதமான தகவல்களும் இதை பற்றி இன்னும் வெளிவரவில்லை. மேலும் இந்த திரைப்படத்தில் படப்பிடிப்பு இனியும் ஸ்ருதி ஹாசன் அவர்களை வைத்து நடைபெறுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

Fan at laabam Shooting spot

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here