தற்பொழுது சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகைகள் கூட கம் பாக் கொடுத்து திரையில் அசத்தி வரும் நிலையில் பல ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வந்த சிம்பு திரைப்பட நடிகை சனா கான் சினிமாவை விட்டு விலக போவதாக பகிர் தகவலை அதிகார பூர்வமாக தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் சினிமாவை விட்டு விலகுவதற்கான காரணத்தைப்பற்றி கீழ் பத்தியில் விவரமாக!!

மும்பையில் பிறந்த சனா கான் 2005-ம் ஆண்டில் வெளியான “ஏஹி ஹாய் ஹை சொசைட்டி” என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட்டில் தங்களுக்கு மார்க்கெட் இல்லையென்றால் தென் இந்திய மொழிகளில் குதிக்கும் மற்ற வட இந்திய நடிகைகள் போல் தமிழ் சினிமாவில் இறங்கிய சனா ஜீவா மற்றும் நயன்தாரா நடித்த “ஈ” என்ற திரைப்படத்தில் மசாலா கதாபாத்திரத்தில் நடித்தார்.

Sana Khan in Silambattam

Sana Khan in Silambattam

அதற்கு பின் சரவணன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் திரைப்படத்தில் கதாநாயகியாக தோற்றமளித்த சனா கான் அதன் பின் தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். எதிர் பார்த்த அளவிற்கு தமிழ் சினிமாவில் வெற்றி கிடைக்காத சனா கான் 2013-ற்கு பிறகு தமிழ் நடிக்கவில்லை. 2019-ம் ஆண்டு விஷால் நடித்த “அயோக்கிய” திரைப்படத்தில் ஒரு மசாலா பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த சனா கான் மெல்வின் லூயிஸ் என்ற நடன இயக்குனரை பல வருடங்களாக காதலித்து வந்தனர். இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் மெல்வின் தன்னை ஏமாத்தி விட்டதாக செய்தியை வெளியிட்டார். காதல் தோல்வியினால் மிகவும் மனமுடைந்து போன சனா கான் தற்பொழுது இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

Silambattam Poster

இதைப் பற்றி அவர் கூறுகையில் “வாழ்கை என்பது பணத்திற்காகவும் புகழிற்காகவும் ஓடுவது மட்டுமல்ல! முடியாதவர்களுக்கு உதவி செய்வதும் தான். உயிர் என்பது எப்பொழுது வேணாலும் நமது உடலை விட்டு பிரியலாம், ஆதலால் நாம் உள்ளவரை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வோம். கடவுள் ஆசியுடன் நான் சினிமாவை விட்டு விலகி சமூக சேவையில் ஈடுபட உள்ளேன்!” என அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். மனித வாழ்கை என்பது நல்ல கணவன்/மனைவி அழகான குழந்தைகள் தான் என நாம் அனைவரும் நினைத்திருக்கும் நிலையில் இவர் இப்படி துறவியாக போவது ஆச்சரியம் தான். இதைப்பற்றி உங்கள் கருத்து என்னவென்று மறக்காமல் பதிவிடுங்கள்!!
Sana Khan Photos
Sana Khan Photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here