VJ Chithra romantic clicks

நூற்றுக்கணக்கான சீரியல்களும் அதில் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்கள் தோன்றியிருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சித்ரா அவர்களுக்கு திருமணமென கடந்த மாதம் செய்திகள் வெளியானது.

அதனை அவரே அதிகாரப் பூர்வமாக தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது தன் வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் வயித்தெரிச்சலை கிளப்பி வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நிச்சியதார்தம் முடிந்து விரைவில் திருமணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிறந்த சித்ரா 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சட்ட சொல்வதென்ன” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை ஆரபித்தார். அதன் பின் ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றிய சித்து விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல் வாய்ப்புகள் கிடைத்த பின்னர் அந்த தொலைக்காட்சியிலேயே கடந்த 3 ஆண்டுகளாக பல நிகழ்ச்சியிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

VJ Chithra

௨௮ வயதாகும் இவர் தனக்கு ஹேமந்த் என்ற தொழிலதிருடன் திருமண நிச்சியதார்தம் முடிந்ததாக 5வாரங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார். பலருக்கும் கனவு கன்னியாக இருந்த சித்ரா திருமணம் செய்வதை நினைத்து மனம் வருந்திய ரசிகர்களின் வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போல் இவர் அடிக்கடி தன் வருங்கால கணவருடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த ஜோடி பார்க்க அழகாக இருந்தாலும் நமக்கு கிடைக்கவில்லை என்று சற்று பொறாமையாக தான் இருக்கின்றது.

என்ன செய்வது பல காதல் தோல்வியில் இதையும் ஒன்றாக சேர்த்து கொண்டு அடுத்த காதலியை தேடி செல்ல வேண்டியது தான்! இந்த ஜோடி சகல செல்வமும் பெற்று சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்! மிஸ் யூ சித்ரா.

Vj chithu with her fiance

Vj chithu with her fiance

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here