கடந்த மாதம் செப்டம்பர் 25-ம் தேதி இந்திய திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கருப்பு தினமாக அமைந்தது காரணம் இசையில் ஜாம்பவனான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் உயிர் பிரிந்தார். 50 நாட்களுக்கும் மேல் சிகிச்சை பெற்றும் பயனில்லாமல் உயிர் பிறந்த இவரை தங்களது பண்ணை வீட்டின் அருகில் அடக்கம் செய்தனர்.
சென்னைக்கு அருகாமையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் அமைந்துள்ள இவரது சமாதிக்கு பிரபலங்கள் பலரும் வந்து தற்பொழுது தனிப்பட்ட முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்ட எஸ் பி பி அவர்களின் நினைவிடத்தை பார்க்க ரசிகர்களும் குவிந்து வருகின்றனர்.
கொரோனா தொற்று இன்னும் பரவி வரும் நிலையில் ரசிகர்களை அனுமதிக்காத எஸ் பி சரண் முக்கியமான நபர்கள் மட்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த தனி வழி அமைத்துள்ளார். மேலும், ரசிகர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் அஞ்சலி செலுத்த வரவேண்டாம் என அறிவுரை கூறிய எஸ் ப் சரண் ரசிகர்கள் பார்வைக்காக எஸ் பி பி நினைவிடத்தை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தங்கள் குல வழக்கப் படி சில சம்பர்தாயங்களை செய்த எஸ் பி சரண் தன் தந்தையின் நினைவிடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!
மேலும் எஸ் பி பி அவர்களின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட போவதாக அறிவித்துள்ள எஸ் பி சரண் கூடிய சீக்கிரம் வேலைகளை ஆரம்பிப்பதாகவும் அதன் பின் ரசிகர்கள் எந்த நேரத்திலும் வந்து அஞ்சலி செலுத்தலாம். அதுவரை பொறுமை காக்கவும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் ரசிகர்கள் யாரும் இப்பொழுது சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்!