அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி வெற்றிகரமாக சீசன்-1 கடந்து சீசன்-2 வெற்றிகரமாக நடந்து வருகின்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்து வரும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் அவர்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
அதில் குக் மற்றும் கோமாளிகள் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கோமாளிகள் கலாட்டா வேற லெவலில் இருப்பதாகவும் பாராட்டினார். மேலும், கோமாளிகள் அனைவரிடமும் ஒரு திரைப்படமாவது ஒன்றாக பணியாற்றுவேன் என தன் விருப்பத்தை தெரிவித்த சிவகார்த்திகேயன் முதலில் சூப்பர் சிங்கர் ஷிவாங்கியை
தேர்ந்தெடுத்துள்ளார்.
கேரளாவில் இருந்து தமிழகத்தில் செட்டிலான இசைக்குடும்பத்தில் பிறந்த சிவாங்கி 2019 ம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7 யில் பங்கேற்று தன் அழகான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களை வென்றார். சிறப்பாக பாடி வந்த சிவாங்கி எதிர்பாராத விதமாக செமி பைனலில் எலிமினேட் செய்யப்பட்டார் அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வந்த சிவாங்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தில் நடிக்க உள்ள செய்தி வெளியானது.
இதைப் பற்றி ரசிகர்கள் பலரும் பேசி வந்த நிலையில் சிவாங்கி தற்பொழுது தன் சமூக வலைத்தளத்தில் #gobackmodi என்ற ஹாஸ்டேக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இன்று கேரளா மற்றும் தமிழகத்தில் பல விதமான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வரும் நிலையில் வெள்ளித்த்திரையில் அறிமுகமான இரண்டாவது நாளே இப்படி பதிவிட்டுள்ளது அக்கட்சியினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ட்ரெண்டான அந்த பதிவைக் கண்ட சிவாங்கி தனக்கு ட்விட்டர் பக்கத்தில் கணக்கு இல்லை என்றும் வேறு யாரோ என் பெயரை வைத்து விளையாடுகிறார்கள் எனவும் தன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளக்கம் தெரிவித்துள்ளார். இருப்பினும் சிலர் அது அவரென நினைத்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.