தாமதமாக தொடங்கினாலும் காரம் சாரமாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் ௪ யில் தினமும் சிறு சிறு திருப்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. சிறிதும் எதிர்பார்ப்பின்றி ௧௭ வது போட்டியாளர் அர்ச்சனாவை திடீரென்று அறிமுகம் செய்தது எலிமினேஷனில் இருந்து தப்பிக்க பிரீ பாஸ் போன்ற பல்வேறு சுவாரிஸ்யங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு ட்ரெண்டிங் டாபிக்.
வந்த இரண்டாவது நாளே சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதாவிற்கு சண்டை கிளம்பியது. சுரேஷ் மீது சிலர் தவறு கூறினாலும் சிலர் அனிதா கலாய்ப்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொழுது இவரும் மற்றவர் கலாய்த்தால் ஏற்று கொள்ள வேண்டும் அதை ஏற்று கொள்ளாத அனிதாவின் மீது தான் இந்த சர்ச்சையில் தவறு என்றும் கூறிவருகின்றனர். இதற்கு கமல் ஹாசன் அவர்களும் அனிதாவை நேராக கூறவில்லை என்றாலும் மறைமுகமாக கூறினார்.
அந்த சண்டையை முடிப்பதுக்குள் அடுத்த சண்டையை ஆரம்பித்த சுரேஷ் சக்கரவர்த்தி ரசிகர்களுக்கு என்றும் பொழுது போக்கு தருவதில் குறைவைத்ததே இல்லை. இரண்டாம் வாரத்தில் ரியோவிடம் குரூப்பிஷம் என்ற சொல்லால் வாயை விட்டு மாட்டிக்கொண்ட சுரேஷை கார்னெர் செய்வது போலவே அடிக்கடி தோன்றுகிறது. இருப்பினும் பாலா மற்றும் ஆரி சுரேஷுடன் சிறிது நெருக்கமாக உள்ளது அடிக்கடி காண முடிகிறது.
பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பித்து 10 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் தற்பொழுது சுரேஷ் சக்கரவர்த்தியின் மற்றொரு முகம் வெளியாகி உள்ளது. இன்று வெளிவந்த ப்ரோமோவில் “டாஸ்கில் சுரேஷை தவர்த்து வேறு யாரும் கேப்ரில அணியில் சேரவில்லை என்றும் இவர்கள் இருவர் மற்றும் இணைத்து மற்ற பெரும் அணிகளுடன் போட்டி இடுவது போல் வெளியாகியுள்ளது. அதில் கேப்ரில மீது அதிகம் பாசம் கொண்டு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.”
மிகவும் அன்பு காட்டும் அந்த சுரேஷ் சக்கரவர்த்தியை பலருக்கும் பிடித்திக்கிறது அதனால் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதை பற்றி அவரது நண்பர்களிடம் கேட்ட பொழுது “அவர் அப்படி தான் அவருக்கு முன் கோபம் அதிகம் இருந்தாலும் அதே அளவு பாசமும் காட்டும் மாமனிதன்!” என்று கூறியுள்ளனர். உள்ளதை உள்ளபடி பேசும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு தற்பொழுதே ரசிகர்கள் கூடி வரும் நிலையில் வரும் காலங்களில் இது போன்ற செயல்களால் இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Suresh Great man , Correct ah irrukaaga Suresh sir ku kovamum varum,Anpum Varum 💐✌️ good man and Nalla Singam mathiri thairiyama irrukaaga ✌️✌️