பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பல சீரியல் தொடர்கள் ஒளிபரப்பு ஆகி வருகிறது.மேலும் அதில் மக்கள் மத்தியில் பிரபலமான தொடர் தான் தமிழும் சரஸ்வதியும்.இத்தொடரில் ஹீரோவாக தீபக்கும் மற்றும் ஹீரோயினாக நக்ஷத்திராவும் நடித்து வருகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு வெற்றிகரமாக இன்று வரை ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருக்கிறது.இதில் தீபக்,நக்ஷத்திரா,மீரா கிருஷ்ணா,லாவண்யா மாணிக்கம்,மீரா கிருஷ்ணன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னா கதாப்பாத்திரம் கதையில் பல்வேறு திருப்பங்களுக்கு காரணமாக அமைந்து இருக்கிறது.இக்கதையில் தமிழ் திருமணம் ஆகாதவர் என நினைத்து அவர் மீது மேக்னா ஆசைப்பட்ட நிலையில் அவருக்கு சரஸ்வதியுடன் திருமணம் ஆகிவிட்டது என்று அறிகையில் வில்லியாக மாறினார் மேக்னா.
இதில் மேக்னா வாக நடித்து வருபவர் தான் நடிகை அக்ஷிதா போப்பையா.இவர் தெலுங்குவில் முதன் முதலாக திரை துறைக்கு அறிமுகமான படம் தான் அந்தரி பந்துவய.மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகி வரும் தொடரில் தான் பாப்புலர் ஆகி வருகிறார்.
தற்போது அக்ஷிதா அவர்கள் கிளாமர் உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.