teejay arunachalam rejects 800

கடந்த இரண்டு நாட்களாக இணைய தளத்தில் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாதென்று விவாதம் போய்க்கொண்டிருக்கும் நிலையில், அசுரன் திரைப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு மகனாக நடித்த டிஜே அருணாச்சலம் “800” திரைப்படத்தில் முத்தையா முரளிதரனின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் படம்பிடிக்க உள்ள முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு திரைப்படத்தின் பேச்சுகள் ஆரம்பித்த முதலே இது படமாக கூடாதென்று பலரும் எதிர்த்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியானது இதைக்கண்டு சில ரசிகர்கள் பாராட்டியம் சில ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

800 Movie Poster

என்னதான் தமிழ் மண்ணில் உருவெடுத்தவர் என்றாலும் சிங்களத்துக்கு சென்று அங்கே குடிமகனான முத்தையா முரளிதரன் இலங்கை அரசுடன் சேர்த்து தமிழரை இழிவு படுத்திய துரோகி எனவும், அதனால் அவரது திரைப்படத்தில் ஒரு தமிழன் நடிக்க கூடாதென்று எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு விளக்கமளித்த பட குழு “இது முற்றிலும் அவரது திறமை மற்றும் விளையாட்டை பற்றி எடுத்த திரைப்படம். இதில் எந்த விதமான அரசியலும் பேசப்படவில்லை! ஈழ தமிழர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர், இக்கதை படமானால் பல ஈழ தமிழர்களின் திறமைகள் வெளிவரும்” என்று அறிக்கை விடுத்தனர்.

இருப்பினும் பாரதி ராஜா சேரன் சீனு ராமசாமி தாமரை போன்ற பிரபலங்கள் இத்திரைப்படத்தில் உடன் பாடு காட்டாத நிலையில் தமிழ் பாடகர் மற்றும் நடிகர் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்ட செய்தியை தற்பொழுது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் இந்த பிரச்சனைகள் உருவெடுப்பதற்கு முன்னரே இதில் உள்ள அரசியலை புரிந்து மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா வாழ் தமிழரான இவர் இதைப் பற்றி கூறுகையில் “இந்தியாவில் நான் இருக்கும் பொழுது 800 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை அணுகி முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் சிறு வயது முரளியாக நடிக்க என்னிடம் கதையை கூறினார். கதையை கேட்ட நான் அதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள அரசியல் பிரச்சனைகள் வெளிப்படுத்தும் வகையில் இருந்ததால் நடிக்க மறுத்தேன்.”

 

View this post on Instagram

 

👍🏿

A post shared by TEEJAY (@teejayarunasalam) on

“மேலும், எனது அம்மா ஒரு ஈழ தமிழர் அங்கு தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி நான் அறிவேன் அதுமட்டுமின்றி எனது திரைப்படத்தில் அரசியல் கொண்டு வர விரும்பவில்லை அதனால் திரைப்பத்திற்கு நோ சொன்னேன்” என்று தெளிவாக பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி தனக்கு நல்ல நண்பர் என்றாலும் இது போன்ற படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் டீஜேவின் செயலுக்கு ஆதரித்து வரும் நிலையில் கலையில் என்ன அரசியல் பார்க்கிறீர்கள் வாய்ப்பை வீணாக்காதீர்கள் என்றும் சிலர் அவருக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

Teejay Arunachalam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here