தமிழ் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் கருப்பாக இருப்பவர்கள் குள்ளமாக இருப்பவர்கள் அழகில் குறைவாக இருப்பவர்கள் சினிமாவில் நடக்க கூடாதென்று பல தடைகளும் இருந்தனர். அந்த தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி சினிமா துறையில் சாதித்த மாமனிதன் விஜயகாந்த் அவர்கள். ஆனாலும் அவரும் ஆரம்ப காலத்தில் தன் தோல் நிறத்தால் பழிக்கப்பட்டவர் தான்.
பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜயகாந்த் அவர்கள் 1979-ம் ஆண்டு “இனிக்கும் இளமை” என்ற திரைப்படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதே ஆண்டு “அகல் விளக்கு” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜயகாந்திற்கு ஆரம்ப காலம் கொஞ்சம் சிக்கலைத் தான் கொடுத்தது. ஆனாலும் அவர் அதை படிக்கல்லாக மாற்றி மேலும் மேலும் உயர்ந்து நிற்கின்றார்.
80’களில் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொண்டு வந்து சேர்த்தாலும் பல படங்கள் அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அது மட்டுமின்றி அவர் நிறம் மற்றும் உடல் அமைப்பினால் கூட ராதிகா அம்பிகை சரிதா ராதா போன்ற பல தமிழ் பட நடிகைகள் அவருடன் சேர்ந்து நடிக்க தயங்கினார்கள். ஆனாலும் அதைப் பற்றி எதுவும் கவலைப் படாது உழைத்து முன்னேறிய விஜயகாந்த் பலருக்கும் முன் உதாரணமாக அமைந்தார்.
போலீஸ், ரவுடி என நவரச கதாபாத்திரங்களில் கலக்கி வந்த விஜயகாந்த ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினியை விட அதிக ஹிட் படம் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தார் வாய்ப்பை மறுத்த நடிகைகள் கூட விஜயகாந்த் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கேட்டார்களாம். இது பிரபல சினிமா ஊடகம் ஒன்றில் பரவி வருகின்றது.