பிக் பாஸ் நிகழ்ச்சி பல குடும்பங்களும் பார்க்கும் 105 நாட்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. 15 முதல் 18 போட்டியாளர்களை வைத்து விளையாடும் இந்த ரியாலிட்டி ஷோவ்வானது வெற்றிகரமாக 3 சீசன்களை கடந்து 4-வது சீசன் நடந்து வருகின்றது. விஜய் டிவி என்றாலே காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் தளம் என்ற பெயரை ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெற்றிருக்கும் இந்த தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன் 4-யிலும் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டது என ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ்ஸில் கடந்த 3 சீன்களில் 5 காதல்கள் உருவாகியுள்ளது நம் அனைவருக்கு அறிந்தவையே. ஆனால் பிக் பாஸ் வீட்டினில் ஆரவ்-ஓவியா, கவின்-லாஸ்லியா, முகின்-அபிராமி, ஐஸ்வர்யா-ஷாரிக், மஹத்-யாஷிகா ஆனந்த் ஆகிய 5 ஜோடியும் வீட்டின் வெளியில் சென்று சேரவில்லை . அதிலும், ஆரவிற்கு நடிகை ராஹேய் என்பவருடன் திருமணமே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி முக்கோண காதல், மருத்துவ முத்தம் என பல காதல்களை காட்டியுள்ள விஜய் தொலைக்காட்சி இந்த சீசனிலும் காதல் ஜோடியை உருவாக்கும் என பலரும் தெரிவித்திருந்தனர். சொன்னபடியே தற்பொழுது பிக் பாஸ் வீட்டினுள் முக்கோண காதல் உருவாகி வருவது போல் தெரிகிறது. இதனை கவனித்த ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த முக்கோண காதல் பாலாஜி-கேப்ரில்லா-ஷிவானி இடையில் தான் மலர்ந்து வருகின்றது. ஏற்கனவே பாலா மற்றும் கேப்ரில்லா நெருங்கிய நண்பர்களாக உள்ள நிலையில் ஷிவானி மற்றும் பாலா இந்த வாரத்தில் தான் ஒன்றாக அமர்ந்து பேசவே ஆரம்பித்துள்ளனர். அதிலும் இந்த இரண்டு நாட்களாக இருவருக்கும் இடையில் காதல் மலர்வது அப்பட்டமாக தெரிந்து வருகிறது.
பாலாஜி கேப்ரில்லாவை தங்கை என்று கூறியும் அதை ஏற்க மறுத்த கேப்ரில்லா நாம் நண்பர்கள் என கூறி வருகிறார். கேப்ரில்லா பாலாவை காதலிப்பதும் பாலா ஷிவானியை காதலிப்பதும் கடைசியில் முக்கோண காதலாக போய் முடியலாம் என ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது வெளிவந்துள்ள ப்ரோமோவும் அதனை குறியிடும் படி அமைந்துள்ளது.
இதுவரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகாத உள்ள நிலையில் இந்த காதல் மூலம் மிகவும் பிரபலமாக வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் பேட்டி ஒன்றில் நான் திருமணம் செய்துகொண்டால் ஒரு நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் அதும் ஆதர்வா போன்ற நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.
பாலாவிற்கு அதே மாதிரி உடல் அமைப்பு இருந்தாலும் ஆவர் இன்னமும் எந்த திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை. ஒருவேளை இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டால் ஷிவானி பாலா படத்தில் நடித்தால் தான் திருமணம் என நிபந்தனை போடவும் வாய்ப்புள்ளது.