சைரா என்னும் படத்தின் மூலம் 2005 ஆண்டு மலையாள படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. பிறகு டைம்,த்ரில் போன்ற படங்களில் நடித்துள்ளர்.தமிழில் விமலுக்கு ஜோடியாக என்கின்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.முதல் தமிழ் படத்திலேயே தமிழ் ரசிகர்களால் அதிக கவனம் ஈர்க்கப்பட்டு கவனிக்கப்பட்டவர் தான் இனியா.

இதை தொடர்ந்து அம்மாவின் கைபேசி,சென்னையில் ஒரு நாள், மௌனகுரு,நான் சிகப்பு மனிதன் என அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் எதிர்பார்த்த அளவிற்கு தமிழில் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் தலையை காட்டி வருகிறார்.தற்போது தனது கை வசம் நான் கடவுள் இல்லை என்கிற ஒரே படம் உள்ளது.

தான் சம்பாதித்த பணத்தை வைத்து நடிகை இனியா அனோர ஆர்ட் ஸ்டுடியோ என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.இது முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் கொண்ட நிறுவனமாக இயக்கி வருகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இனியா தனது நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாகை சூடவா நடிகையாக இது என ஆச்சிரியதுடன் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here