விஜய் தொலைக்காட்சியில் காமெடி மன்னனாக திகழ்ந்து வந்த வடிவேலு பாலாஜி சமீபத்தில் காலமான செய்தி நம் அனைவர்க்கும் அறித்தவைவே உடல் நலக்குறைவால் 15 நாட்கள் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருந்த வடிவேலு பாலாஜி சிகிச்சை பலனின்றி கடந்த 10-ம் தேதி காலமானார். அதன் பின் அவரை பற்றி பெரிதும் பேசப்படாத நிலையில் அவரது காமெடியில் கலக்கிய கடைசி நிகழ்ச்சி கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி உள்ளது.
அது இது எது சிரிச்ச போச்சி ஜோடி நோ.௧ போன்ற விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மக்களை சிரிக்க வைத்த இவர் கோல மாவு கோகிலாவே கோகிலா போன்ற படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்த கடைசி நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் தற்பொழுது வேலையாகியுள்ளது.
பிரபல தொகுப்பாளனியான பிரியங்கா தேஷ்பாண்டே தொகுப்பில் 6 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் 4 சுற்றுகள் இருக்கின்றன. முதல் சுற்றில் ரூபாய் 10000, இரண்டாம் சுற்றில் ரூபாய் 25000, மூன்றாம் சுற்றில் ரூபாய் 50000, நான்காம் சுற்றில் ரூபாய் 1 லட்சமென பரிசு மழையை பொழியும் இந்நிகழ்ச்சியில் பணப்பேட்டி உள்ள அறையில் சென்று ஜெயித்த அணியினர் சரியான பெட்டியை எடுத்தால் மட்டுமே பரிசு அவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முதல் சுற்றான சவுண்ட் பார்ட்டி சுற்றுக்கு அடுத்து வரும் சுட்ட பலம் என்ற சுற்றில் கலக்கபோவது யாரு யோகி அவர்களும் வடிவேலு பாலாஜி அவர்களும் ஒருவாரத்திற்கு ஒருவரென மாற்றி மாற்றி பங்கு பெற்று இரண்டு அணிகளாக பிரிந்திருக்கும் 6 போட்டியாளர்களுக்கு பாடல் வரிகளை காமெடியுடன் கலந்து துப்பாக கொடுப்பார்கள். அதை வைத்து சரியான பாடலை படுபவரே அந்த சுற்றின் வெற்றியாளர்.
அந்த வகையில் இந்த வாரம் பங்கேற்ற சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுக்கு காமெடி விருந்து வைக்க தலை நகரம் “நாய் சேகர்” கெட்டப்பில் வந்திருந்த வடிவேலு பாலாஜி 5 நிமிடங்கள் நம்மை இதயம் குமுறும் நிலையில் வாயில் சிரிப்பை வரைவழைத்தார். இதில் பங்கேற்றது முக்குத்தி முருகன் ரோஷினி சுகந்தி விக்ரம் பூர்ணிமா சாம் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சி ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி முடித்த நிலையில் அதன் மறு ஒளிபரப்பு பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. பார்க்க நினைப்பவர்கள் விஜய் தொலைக்காட்சியின் செயலியான ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியை காணலாம்