தமிழ் சினிமா துறையில் 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த.

அதற்கு முன்பு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தனது திரை துறை பயணத்தை 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்கின்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.மேலும் துருவங்கள் பதினாறு,பாடம்,மானியார் குடும்பம்,நோட்டா, சைதிரா,சில நொடிகள்,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என வரிசையாக படங்கள் நடித்துள்ளார்.

தற்போது இவன் தான் உத்தமன், பாம்பட்டம், சல்பர்,ராஜா பீமா,சிறுத்தை சிவா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.பொதுவாக அதிகமாக கிளாமர் காட்டி ஈர்த்தவர் நடிகை யாஷிகா ஆனந்த.அவரது புகைப்படங்களை பார்க்க தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார்.சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷீன் ஆனந்த தனது அக்காவை போல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here