ஆர் ஜே வாக பணியாற்றி பிரபலமானவர் தான் பாலாஜி. பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வீ ஜே வாகவும் மற்றும் காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் தான் ஆர் ஜே பாலாஜி.

காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்த பாலாஜி அவர்கள்.மூக்குத்தி அம்மன்,வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கினார்.

ஆர் ஜே பாலாஜி அவர்கள் சில படங்களில் குணசசித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகிறார்கள் இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் பற்றிய பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

ஒரு டாஸ்க்கில் 4 அல்லது 5 மாதத்திற்கு ஒரு போன் நம்பர் மாத்துவேன்.எனக்கு இரண்டு முறை கல்யாணம் நடந்தது.நான் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டேன் என்றும் வீட்டில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

நான் 21 வயது இருக்கும் போதே ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டேன்.அந்த சமயத்தில் ஆர் ஜே வாக வேலை செய்ய வில்லை.என்னிடம் கால் லெட்டர் மட்டும் தான் இருந்தது “எனக்கு முதல் மனைவி இரண்டாம் மனைவி எல்லாம் ஒரே மனைவி தான்”.

திருமணம் செய்து கொண்டதால் வீட்டிலேயே நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள் என ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார்.

