அந்த கால அரசியல் முதல் இந்த கால அரசியல் வரை நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறமைகளை திரைப்படம் மூலம் வெளிப்படுத்தி மக்களிடம் பிரபலமாகி அரசியல் கட்சி தொடங்குவது வழக்கமான ஒன்று தான். எம் ஜி ஆர் முதல் விஜயகாந்த் வரை அப்படி செய்து மிகப் பெரிய வெற்றி கண்டதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதே போல் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் அரசியல் காட்சிகளை தொடங்கி வலுப்படுத்தி வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்களும் சீக்கிரமே அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
தளபதி விஜய் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது ஒருவர் சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அரசியல் மற்றும் சமூக நலன் விழிப்புணர்வு திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் விஜய் அவர்கள் ௨௦௨௧ ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவார் என்று எதிர் பார்த்த நிலையில் அவர் அதற்க்கான எந்த விதமான வேலையும் தொடங்கவில்லை. சரி இந்த ஆண்டு விஜய் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று பலரும் நினைத்தார்கள்.
ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்று நிறுவப்பட்டதாக கூறி செய்திகள் வெளியாகின. ரசிகர்கள் மன்றம் அனைத்தும் அரசியல் கிளைகளாக மாறும் என்று எதிர்பார்த்த நிலையில் எனக்கும் அந்த கட்சிக்கும் எந்த விதமான சம்பத்தும் இல்லை மேலும் என் பெயரை கட்சியில் தவறாக பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்ற அறிக்கையை நடிகர் விஜய் அவர்கள் வெளியிட்டிருந்தார்.
இப்படி இருவரும் சண்டையை கிளப்பி வரும் நிலையில் சிலர் இருவரும் சண்டை போடுவது போல் ஏதோநாடகமாடுகிறார்கள் என்று விமர்சித்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான மீரா மீதும் தைரியம் இருக்கவங்க மட்டும் அரசியலுக்கு வாங்க என விஜய் அவர்களை நேரடியாக தாக்கி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அந்தக் காணொளி உங்கள் பார்வைக்காக! மீரா மீதுன் இதற்கு முன்பே விஜய் ரசிகர்களை சீண்டி வாங்கிக் கட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.