நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்களுக்கு கமல் ஹாசனின் மகள் என்ற பெருமையை விட ஸ்ருதி ஹாசன் ஒரு நல்ல நடிகை என்ற பெயர் அதிகமாக உள்ளது. ஒரு பாடகராக தன் சினிமா பயணத்தை தொடங்கிய ஸ்ருதி ஹாசன் அவர்கள் கமல் நடித்தார் ஹே ராம் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து 2009-ம் ஆண்டு லக் என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தெலுங் குவிலும் டேபுட் செய்த ஸ்ருதி ஹாசன் 2011-ம் ஆண்டு எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த அறிவியல் ரீதியான திரைப்படமான “7 ஆம் அறிவு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தொடர் வெற்றி படங்களை தந்த ஸ்ருதி ஹாசன் தற்பொழுது தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழியிலும் சிறப்பாக நடித்து வருகிறார்.
பொதுவாக பிரபலமான நடிகைகள் என்றாலே கிசு கிசு களுக்கு பஞ்சமே இருக்காது அந்த வகையில் ஸ்ருதி ஹாசன் அவர்களும் லண்டனை சேர்ந்த மைகேல் கார்சேல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தன. ஸ்ருதி ஹாசனும் அதற்கேற்ப அவருடன் புகைப்படங்களை நெருக்கமாக எடுத்து தன சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார். ஒரு பக்கம் இருவருக்கும் காதல் இருப்பது உறுதியான நிலையில் அதில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.
நெடுந்தூர காதல் என்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கடினமாக இருக்கின்றது அதனால் ஸ்ருதி ஹாசன் காதலை உதறி தள்ளி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்று ஒரு மாதத்திற்கு முன்பு செய்திகள் வெளிவந்தது. இதனை போலியான செய்தி என ரசிகர்கள் பலரும் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் தற்பொழுது ஸ்ருதி ஹாசன் காதலன் மற்றொரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக உள்ளபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படம் ஸ்ருதி ஹாசன் மற்றும் மைக்கேல் கார் சேல் இடையிலான காதல் முறிவை சுட்டிக் காட்டுகின்றது. இதனை உணர்ந்த ஸ்ருதி ஹாசன் ரசிகர்கள் வெள்ளைக்காரனை வெளுத்து வாங்கி வருகின்றனர்.