தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்கப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ். ஏற்கனவே 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சீசன் 4 ஆனது கொரோனா பாதிப்பால் தாமதம் ஆகி கொண்டே இருந்தது. ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 4 கண்டிப்பாக நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் பலரும் ஆரம்பிக்கும் தேதி மற்றும் போட்டியாளரை கணித்து வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் படி பிக் பாஸ்ஸில் இருந்து வெளிவந்தது அடுத்த அப்டேட். விவரம் கீழ் பத்தியில்.
ரசிகர்கள் மற்றும் மீடியா பிரபலங்கள் பலரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஆனது அக்டோபர் மாதம் மாதம் முதல் வாரத்தில் அல்லது இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என அவர்களின் கருத்தை தெரிவித்திருந்தார். அவர்கள் கணிப்பு சரிதான், பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 4- ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதை பிக்-பாஸ் தமிழ் நிகழ்ச்சியை எடுத்து நடத்தும் விஜய் தொலைக்காட்சியே அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. எந்த ஒரு நாட்கள் குறைப்பு போட்டியாளர்கள் குறைப்பு போன்ற செய்திகள் இருக்காது என ரசிகர்கள் நம்புகிறன்றனர்.
மற்ற மூன்று சீன்களில் நடந்தது போல் இந்த சீசன்களிலும் அதே விதிகள் இருக்காது என்பது நிபுணர்களின் கணிப்பு. மற்ற சீசனுடன் ஒப்பிடும் பொழுது இந்த சீனில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். தனி தனி படுக்கைகள், சாப்பிடுவதற்கு அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தட்டுகள் மற்றும் டாஸ்க்களில் மாற்றம், சமூக இடைவேளை போன்ற பல கட்டுக்கோப்புகள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக பிக் பாஸ் சுற்றுவட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றனர்.
மேலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டினுள் வருவதற்கு முன்பே கொரோனா பரிசோதனை செய்து தேர்ந்தெடுக்கும் நிலையில் போட்டியாளர்கள் உள்ளே வந்த பிறகும் வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனையில் ஈடுபடுத்த போவதாக தெரிவித்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்கள் தனியார் விடுதிகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளது என்பது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் அறியப்படவில்லை.