இன்றைய சூழ்நலையில் அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இவர் உள்ளார்.2005 ஆம் ஆண்டு Chand sa Roshan chera என்னும் படம் மூலம் ஹிந்தியில் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஶ்ரீ படத்தில் சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.2006 ஆம் ஆண்டு கேடி படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் இலியானா விடன் இணைந்து நடித்துள்ளார்.

தென்னிந்திய வில் முன்னணி நடிகையாக உள்ளார்.இளம் வயது முதலே நடனம்,மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.

தற்போது முன்னணி நடிகையாக வரும் தமன்னா தான் முதல் படத்தில் பார்த்த சிறுமி.34 வயதாகும் நடிகை தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்தே சினிமா துறையில் நடித்து வருகிறார்.தமிழில் ரஜினி,விஜய்,அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அயன்,சுறா,சிறுத்தை,கோ,தோழா,இஞ்சி இடுப்பழகி என வரிசையாக தமிழில் நடித்துள்ளார்.தமிழ்,தெலுங்கு,மராத்தி,கன்னடம்,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.தமன்னா கேரியரில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் மிகப்பெரும் வரவேற்பை அவருக்கு பெற்றுத்தந்தது.

இப்படி ஒரு நிலையில் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.தமிழில் தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார்.சினிமாவை தவிர்த்து ஹோட்டல் மற்றும் ஆபரணங்கள் வர்த்தகத்திலும் தமன்னா அவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here